அசால்டாக ஒரு பதிலை கொடுத்த ஸ்ருதிஹாசன்

 

ww

இந்திய அளவில் பல மொழிகளிலும் நடித்து வரும் முன்னணி நடிகை ஸ்ருதிஹாசன். தற்போது தனது தந்தை கமல்ஹாசன் நடித்து வரும் சபாஷ் நாயுடு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதி. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது. தவிர, மலையாள பிரேமம் படத்தில் தெலுங்கு ரீமேக், சூர்யா நடித்து வரும் எஸ்-3 போன்ற படங்களில் தற்போது பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடனான காதல் சர்ச்சையில் சிக்கியிருப்பதோடு, அவர்களது திரு மண நிச்சயதார்த்தமும் ரகசியமாக நடந்து முடிந்து விட்டதாகவும் பரப்பு செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து இப்போது ஸ்ருதிஹாசனும் மும்பையைச்சேர்ந்த ஒரு தொழிலதிபரை காதலித்து வருவதாகவும் அவர்களது திருமணம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதாகவும் இணைய தளங்களில் வைரலாக ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.

ஆனால், அந்த செய்தி ஸ்ருதிஹாசனின் காதுக்கு சென்றபோது அவர் துளியும் ரியாக்ட் பண்ணவில்லை. தனது டுவிட்டரில், ஓகே அப்புறம் -என்று அசால்டாக ஒரு பதிலை கொடுத்து அந்த செய்தியை கிண்டல் செய்திருக்கிறார்.

இதனால் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வந்த ஸ்ருதிஹாசனின் திருமண செய்தி, இப்போது பிசுபிசுத்துப் போய் விட்டது.

 

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...