அஜித் ரசிகர்கள் தரும் மரியாதை- ஷாம்லி பெருமிதம்

fg
அஜித் மனைவி ஷாலினிஅஜித்தின் சகோதரி ஷாம்லி தற்போது தனுஷ் நடிக்கும் கொடி படத்திலும், விக்ரம் பிரபு நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஷாமிலி, தனது முதல் போட்டோஷூட் குறித்தும், அந்த போட்டோஷூட்டை எடுத்த அஜித் மற்றும் ஷாலினிஅஜித் குறித்தும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் ஹீரோயின் ஆவதற்கு முன்னர் அஜித் தன்னை போட்டோஷூட் எடுத்ததாகவும், அந்த போட்டோஷூட்டின்போது தனக்கு ஷாலினிஅஜித் காஸ்ட்யூம் குறித்து சில குறிப்புகள் கூறியதாகவும் கூறிய ஷாம்லி, இந்த போட்டோஷூட்டை தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு அம்சமாக தன் மனதில் என்றும் இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் படப்பிடிப்பின்போது தான் வெளியூருக்கு செல்லும் இடங்களில் தன்னை அனைவரும் நடிகையாக கருதாமல், அஜித்தின் உறவினராக கருதி தனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் அஜித்தின் ரசிகர்கள் அளிப்பதாக பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
தற்போது விக்ரம்பிரபு படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வரும் ஷாமிலி, விரைவில் 'கொடி' படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...