அதிர்ந்த இந்திய சினிமா – ‘கபாலி’ 6நாளில் இத்தனை கோடியா?

rajniage3x2

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் கபாலி. இப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை நேற்று படத்தின் வெற்றி சந்திப்பில் தயாரிப்பாளர் தாணு தெரிவித்தார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து ஜூலை 22ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்த படம் கபாலி. இப்படம் கலைவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூலில் எந்த குறையுமின்றி வெற்றி நடைப் போடுகிறது.

இந்நிலையில், நேற்று படத்தின் வெற்றி சந்திப்பு நடைப்பெற்றது. இதில் 'கபாலி' படக்குழுவினர் கலந்துக் கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது பேசிய தாணு படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்தார். இதனை கேட்டு இந்திய சினிமா வட்டாரமே அதிர்ந்து போய் உள்ளது. 

ஏன்னென்றால் இப்படம் வெளியான 6 நாட்களில் ரூ.320 கோடி வசூல் செய்துள்ளதாம். மேலும் சென்னையில் மட்டும் 6 நாட்களில் ரூ.6 கோடி வசூல் செய்துள்ளது என்றும் தாணு தெரிவித்தார்.

இதனிடையே, இந்த சாதனையை வேறு எந்த இந்திய திரைப்படமும் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் 'இந்திய பாக்ஸ் ஆபிஸ் கிங்' தான் தான் என்று 'ரஜினி' நிரூபித்துள்ளார்.

 

[vivafbcomment]

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...