அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படம் இணையத்தில் லீக் ஆகிவுள்ளது – CineHacker

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படம் இணையத்தில் லீக் ஆகிவுள்ளது

அல்லு அர்ஜுன் நடிப்பில் மிக பிரம்மாண்டமான படமாக ‘புஷ்பா’ படம் உருவாகி உள்ளது. இதனை சுகுமார் இயக்கியுள்ளார். இதற்கு முன்பு ராம்சரண் நடித்த ‘ரங்கஸ்தலம்’ படத்தை இயக்கியவர். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது ‘புஷ்பா’ படத்தையும் அனைத்து மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, கிஷோர் மற்றும் பல முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். மலையாள நடிகர் பகத் பாசிலை ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார்.

இந்த படத்தின் சண்டை காட்சிகள் இணையத்தில் லீக்காகி தயாரிப்பு நிறுவனத்திற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 13 அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் இந்த படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகளை திருட்டுத்தனமாக இணையத்தில் ஒரு சிலர் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த படத்தின் முக்கிய சண்டைக் காட்சியும் தற்போது வெளியாகியுள்ளது. இது படக்குழுவினருக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது.

தயாரிப்பு நிறுவனம் சைபர் க்ரைமில் புகார் செய்துள்ளது. யார் இந்த செயலை செய்தார்கள் என்று கண்டுபிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இனி இதுபோல் தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு தயாரிப்பு நிறுவனத்தார் கேட்டுள்ளனர்.

Leave a Reply