ஆச்சரிய தகவல்களை வெளியிட்டார், இயக்குனர் மகேந்திரன்.

maxresdefault
படம் இயக்கும் எண்ணம் இல்லாமலிருந்த அவரை முள்ளும் மலரும் படத்தை இயக்க வைத்ததே கமல்தான் என்றார்.முள்ளும் மலரும் படத்துக்கு சரியான கேமராமேன் கிடைக்காதபோது, பாலுமகேந்திராவை கமல்தான் மகேந்திரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
படம் கிட்டத்தட்ட முடிவடைந்த போது, ஒரு காட்சியையும், செந்தாழம் பூவில் பாடலையும் எடுக்க வேண்டாம், பணமில்லை என்று கூறியிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர். இது பற்றி மகேந்திரன் கமலிடம் கூற, கமல் தயாரிப்பாளரிடம் பேசியுள்ளார். அப்போதும் தயாரிப்பாளர் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. வேறு வழியின்றி செந்தாழம் பூவில் பாடலையும், அந்த காட்சியையும் எடுக்க தனது சொந்த பணத்தை தந்துள்ளார் கமல்.
தான் நடிக்கும் படம் நஷ்டமடைந்தால் கோடிக்கணக்கில் சம்பளமாக பெற்ற பணத்தில் சிறு தொகையை திருப்பித் தருவதை வள்ளல்தன்மையாக சித்தரிப்பவர்கள் தான், தனது போட்டியாளர் நடித்த படத்தின் படப்பிடிப்புக்கு பண உதவி உள்பட பல உதவிகள் செய்த கமலை சுயநலவாதி என்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் திறமைசாலிகளை இந்த உலகம் கண்டுகொள்ளும் முன், அடையாளம் கண்டு பாராட்டியவரும், அவர்களை முன்னிறுத்தியவரும் கமல் என்பதற்கு இந்த இரு மலரும் நினைவுகளே சான்று
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...