‘இன்று நேற்று நாளை’ இயக்குனரின் அஜித் கனவு பலிக்குமா!

ajith_12

 

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் அஜித், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் அடித்து வருகின்றன. 

மேலும் தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர்களுக்கு அஜித்தை வைத்து ஒரு திரைப்படமாவது நிச்சயம் இயக்கவேண்டும் எனது கனவாக இருந்து வருகிறது. அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகளும் துவங்கும் நிலையில் இருந்து வருகிறது. 

அஜித்துடன் இணைந்து பணியாற்ற பல இயக்குனர்கள் போட்டி போடும் நிலையில் இந்த லிஸ்டில் சமீபத்தில் ஒரு புதிய இயக்குனரும் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் 'இன்று நேற்று நாளை' படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் ரவிக்குமார். இவரது முதல் படத்திலேயே அனைவரின் ஆதரவையும் பெற்ற இயக்குனரான இவர் சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்துக் கொண்டார்.

அப்போது பேசிய ரவிக்குமார் ‘அஜித் என்றால் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவரை இயக்குவதற்கு ஆவலாக காத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இவர் இப்படி கூறியிருப்பது அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...