இப்போது கடவுள் நம்பிக்கை இல்லை- இலியானா

ileana-dcruz-super-hot-picture-201604-703705

விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இலியானா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இலியானா கடவுள் மற்றும் மத நம்பிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“கடவுள் உண்டு என்றும் இல்லை என்றும் இரண்டு விதமான நம்பிக்கைகள் உள்ளன. என்னை பொருத்தவரை, பெரிய சக்தி ஒன்று இருப்பதாக நான் கருதவில்லை. இதை வைத்து நான் மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு எதிரானவள் என்று யாரும் நினைக்க வேண்டாம். ஒரு காலத்தில் எனக்கும் கடவுள் நம்பிக்கை இருந்தது.

ஆனால் இப்போது கடவுள் நம்பிக்கை இல்லை. இயற்கையை மீறிய சக்தி ஒன்று உலகத்தில் இல்லை. ஆனால் எனக்கு ஆற்றல்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. நேர்மறை ஆற்றல்களும் எதிர்மறை ஆற்றல்களும் மனிதர்களுக்குள் கலந்து இருக்கின்றன. அவைதான் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. நேர்மறை ஆற்றல்கள் நல்லவற்றையும் எதிர்மறை ஆற்றல்கள் துன்பத்தையும் கொடுக்கின்றன.

எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றாலும் எனது பெற்றோர் கடவுளை நம்புகிறார்கள். இந்தியில் தற்போது அக்‌ஷய்குமார் ஜோடியாக ‘ரஷ்டம்’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். கடந்த ஒரு வருடமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தேன். நடிகர்-நடிகைகளுக்கு இதுபோன்ற இடைவெளி அவசியம்தான்.

ஆனாலும் நான் படங்களில் நடிக்காமல் இருந்தபோது சில டைரக்டர்கள் என்னை அணுகி கதைகள் சொன்னார்கள். அந்த கதைகள் எனக்கு பிடிக்கவில்லை. காத்திருப்புக்கு பலனாக அக்‌ஷய்குமாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. நான் அதிர்ஷ்டசாலி. எல்லா நேரமும் எனக்கு நல்ல விஷயங்களே நடந்து இருக்கின்றன.”

இவ்வாறு இலியானா கூறினார்.

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...