இயக்குனரின் திருமணத்திற்கு வராத அனுஷ்கா ?

104dbc2f29010ab222372f4752b0b3eb

சிம்பு, அனுஷ்கா நடித்த 'வானம்' படத்தை இயக்கியவர் கிரிஷ். தெலுங்கில் 'வேதம்' என்ற பெயரில் அல்லு அர்ஜுன், அனுஷ்கா நடித்த படம்தான் தமிழில் 'வானம்' ஆக வெளிவந்தது. 'வேதம்' படத்தை இயக்கிய போது அந்தப் படத்தை இயக்கிய கிரிஷ், நாயகியாக நடித்த அனுஷ்கா ஆகியோருக்கிடையே காதல் என டோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

அதனால்தான் அந்தப் படத்தை அவர் தமிழில் இயக்கிய போதும் அந்தக் கதாபாத்திரத்தில் வேறு யாரையும் நடிக்க வைக்காமல் அனுஷ்காவையே நடிக்க வைத்தார் என்றும் சொன்னார்கள். அதன்பின் வழக்கம் போல அந்தக் காதல் செய்தியும் கிசுகிசு போலத்தான் ஆனது. கிரிஷ் அடுத்தடுத்து இயக்கிய படங்களில் அனுஷ்கா நடிக்கவில்லை.

கிரிஷ் தற்போது பாலகிருஷ்ணா நடிக்கும் 'கௌதமிபுத்ர சடகர்னி' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க அனுஷ்காவைக் கேட்டுள்ளார்.ஆனால், அவர் நடிக்க மறுத்துவிட்டாராம். அதனால், அந்த வாய்ப்பு ஸ்ரேயாவிற்குப் போனது.

இதனிடையே நேற்று கிரிஷுக்கும், டாக்டராக இருக்கும் ரம்யாவுக்கும் நேற்று இரவு ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்வில் அனுஷ்கா நிச்சயம் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார். டோலிவுட் வட்டாரங்களில் இதுதான் தற்போதைய பரபரப்பு விஷயமாக உள்ளது.

 

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...