இறுதிச்சுற்று ஒரு சிறப்புப் பார்வை

வேட்டை படத்துக்குப் பிறகு மாதவன் நடிப்பில் வெளியாகும் படம் இறுதிச்சுற்று. இந்தப் படத்தில் பாக்ஸராக மாதவன் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்துக்காக யுஎஸ் சென்று பல மாதங்கள் பயிற்சி எடுத்து, பாக்ஸருக்கான தோற்றத்தை கொண்டு வந்தார் மாதவன். பெண்களுக்கு பாக்ஸிங் ட்ரெயினிங் தருகிறவராக இதில் மாதவன் நடித்துள்ளார்.Irudhi_suttru
இந்தப் படத்தின் ஹைலைட் நாயகியாக நடித்துள்ள ரித்திகா சிங். இவர் தேசிய அளவில் சிறந்த பாக்ஸர். ஒரு காட்சியில், ரித்திகா சிங் மாதவனை அடிக்க வேண்டும். ரித்திகா விட்ட குத்தில் மாதவனின் ஒரு பல் பெயர்ந்திருக்கிறது. அப்படி மாதவன் ரத்தம் சிந்தி நடித்துள்ள இப்படம், ஒரே நேரத்தில் தமிழ், இந்தியில் தயாராகியுள்ளது. இந்தியில் சால காதூஸ் என்ற பெயரில் வெளியாகிறது.
மணிரத்னத்தின் முன்னாள் உதவியாளரும், துரோகி படத்தின் இயக்குனருமான சுதா கொங்கரா படத்தை எழுதி இயக்கியுள்ளார். ஒய் நாட் ஸ்டுடியோவும், திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்டும் இணைந்து படத்தை தயாரித்துள்ளது. யுடிவி படத்தை வெளியிடுகிறது.
இந்தி பதிப்பை மாதவன், இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியுடன் இணைந்து தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை.
நாளை வெளியாகும் இறுதிச்சுற்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...