உங்க மக்கள் பாசத்தைப் பார்த்து புல்லரிச்சுப் போகுது- தியாகி கரீனா பேட்டி

1461512167-2242
கரீனாவும், ஷாகித்தும் ஒரு காலத்தில் காதலர்கள். பொது இடத்தில் இவர்கள் கொடுத்துக் கொண்ட பிரெஞ்ச் முத்தம் உலக பிரசித்தம். அதன் பிறகு திடீரென்று, ஏற்கனவே திருமணமாகி டீன் ஏஜ் வயதில் குழந்தைகள் உள்ள சைப் அலிகானை கரீனா காதலித்து மணந்து கொண்டார். ஷாகித் சமீபத்தில் மீரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
 இந்த முன்னாள் காதலர்கள் தற்போது உத்தா பஞ்சாப் என்ற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். ஆனால், இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் தனித்தனியாகத்தான் எடுக்கப்பட்டு வருகின்றனவாம்.
 இந்நிலையில் பேட்டியளித்த கரீனா, நானும் ஷாகித்தும் ஒரு காலத்தில் காதலித்தோம், பிறகு பிரிந்தோம். அதனால் நாங்கள் இணைந்து நடிக்க மாட்டோம் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், நாங்கள் நடிகர்கள் மக்களை மகிழ்விப்பவர்கள். மக்களுக்காக நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்போம் என்றார்.
 உங்க மக்கள் பாசத்தைப் பார்த்து புல்லரிச்சுப் போகுது.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...