உதயநிதியின் மனிதனைப் பாராட்டிய ஒரிஜினல் ‘மனிதன்’

udhayanithi_rajini_t
உதயநிதி, ஹன்சிகா, பிரகாஷ் ராஜ், ராதாரவி, விவேக் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான 'மனிதன்', ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
மேலும் ஊடகங்கள் மத்தியிலும் இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் நடிகர் ரஜினியும் இப்படத்தைப் பார்த்து தன்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து உதயநிதி ''சூப்பர் ஸ்டாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நேற்றிரவு மனிதன் திரைப்படம் பார்த்தேன். இப்படி ஒரு கதையை தேர்வு செய்த படக்குழுவுக்கு எனது பாராட்டுக்கள்" என்று வாழ்த்தினார். அவரின் ரசிகன் என்ற முறையில் நான் பெருமிதம் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
சூப்பர் ஸ்டாரின் இந்தப் பாராட்டால் ஒட்டுமொத்த படக்குழுவினரும் தற்போது மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.
1987 ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் 'மனிதன்' என்பது குறிப்பிடத்தக்கது.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...