ஓவர்சீஸ் வசூலில் யார் சூப்பர்ஸ்டார்- டாப் 10 படங்கள்

2013 c

தமிழ் சினிமாவின் மார்க்கெட் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பாலிவுட் படங்களையே ஓரங்கட்டும் விதமாக வசூல் சாதனை படைக்கின்றது. அதிலும் சமீபத்தில் வந்த கபாலி தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் ஓவர்சீஸில் அதிகம் வசூல் செய்த டாப்-10 படங்களை பார்ப்போம். (இவை முன்னணி தளம் ஒன்று வெளியிட்டுள்ள ரிப்போர்ட் மட்டுமே, அதிகாரப்பூர்வ தகவல் இல்லை).

கபாலி

கபாலி கிட்டத்தட்ட சல்மான், ஷாருக், அமீர் என பாலிவுட் நட்சத்திரங்களையே நடுங்க வைத்துவிட்டது. அப்படி ஒரு வசூல் சாதனை இப்படம் வெளிநாட்டில் மட்டும் தற்போது வரை ரூ. 110 கோடி வசூல் செய்து முதல் இடத்தில் உள்ளது.

எந்திரன்

இரண்டாவது இடமும் சூப்பர் ஸ்டாருக்கு தான். ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளிவந்த எந்திரன் ரூ. 66 கோடி வரை வசூல் செய்தது.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரமின் கடின உழைப்பால் கடந்த வருடம் வெளிவந்த ஐ படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் ரூ. 56 கோடி வரை வெளிநாட்டில் மட்டும் வசூல் செய்துள்ளது.

தெறி

இளைய தளபதி விஜய் படங்களுக்கு வெளிநாட்டில் தொடர்ந்து நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் வந்த தெறி ரூ. 44 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதில் அமெரிக்காவில் மட்டும் 1 மில்லியன் டாலர் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

லிங்கா

வெற்றியோ, தோல்வியோ ரஜினி படங்கள் எதுவும் வசூலில் பாதிப்பு ஏற்படுத்துவது இல்லை. லிங்கா இந்தியாவில் தோல்வியை கண்டாலும் வெளிநாட்டில் மட்டும் ரூ. 40 கோடி வரை வசூல் செய்துள்ளது.

சிவாஜி

இந்திய சினிமாவில் முதன் முதலாக ரூ. 100 கோடியை எட்டிய படம் சிவாஜி. ஷங்கர்-ரஜினி முதன் முறையாக கூட்டணி அமைக்க எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டியது. இப்படம் வெளிநாட்டில் மட்டும் ரூ. 39 கோடி வரை வசூல் செய்தது.

கத்தி

இளைய தளபதி விஜய், முருகதாஸ் இரண்டாவது முறையாக கூட்டணி வைத்த கத்தி ரூ. 38 கோடி வசூல் செய்துள்ளது.

வேதாளம்

அஜித் திரைப்பயணத்திலேயே அதிகம் வசூல் செய்த படம் வேதாளம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற வெளிநாட்டில் ரூ. 33 கோடி வரை வசூல் செய்தது. மேலும் போலாந்த் நாட்டில் ரிலிஸான முதல் தமிழ் படம் இது தான்.

24

சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த படம் 24. இப்படம் தமிழகத்தில் பெரியளவில் வசூல் செய்யவில்லை என்றாலும் வெளிநாடுகளில் மாபெரும் வசூல் செய்தது. அமெரிக்காவில் மட்டும் 1.5 மில்லியன் டாலர் வசூல் செய்தது. இப்படம் ரூ. 31 கோடி வெளிநாடுகளில் வசூல் செய்துள்ளது.

சிங்கம்-2

சூர்யா-ஹரி கூட்டணியின் இரண்டாம் பாகமாக வந்த சிங்கம்-2 தான் சூர்யாவின் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படம். இப்படம் வெளிநாட்டில் ரூ. 29 கோடி வசூல் செய்து அவருடைய மார்க்கெட்டை வேறு லெவலுக்கு எடுத்து சென்றது.

இதை தொடர்ந்து ஆரம்பம், என்னை அறிந்தால், விஸ்வரூபம், துப்பாக்கி ஆகிய படங்கள் உள்ளது.

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...