கபாலி ரிலீஸ் ஆகும் அதே நாளில் பிரபல இயக்குனரின் படமும் வெளியீடு

sp-muthuraman-and-sarathkumar’s-request-to-rajini
சூப்பர்ஸ்டார் நடிப்பில் உலகம் முழுவதும் மிக பெரிய எதிர்பார்ப்பில் உள்ள படம் கபாலி. இப்படம் வருகிற ஜுலை 15ம் தேதி மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.இந்நிலையில் இப்படத்துடன் இயக்குனர் சேரனின் இயக்கத்தில் உருவான ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படமும் வெளியாகவுள்ளதாம்
ஏற்கெனவே இந்த படத்தை சேரன் டிவிடியாக வெளியிட்டார் என்றாலும் தியேட்டர் உரிமையாளர்கள் ‘இது நல்ல படம், இப்படத்தை இன்னும் நிறைய ரசிகர்கள் பார்க்கவில்லை, இதனை தியேட்டர்களில் வெளியிட்டால் அதன் மூலம் வரும் வருமானம் சேரனின் பொருளாதார நெருக்கடிக்கு உதவியாக இருக்கும்’’ என்று கூறியுள்ளனர்
இதனையடுத்து சேரன் ’ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை ஜூலை மாதம் 15-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் என்று அவர் தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...