கமலின் நடிகர் சங்க அட்டாச்மெண்ட்

பழைய நடிகர் சங்க நிர்வாகிகளை தூக்கி எறிந்து புதிய நிர்வாகிகள் பதவிக்குவர காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் கமல்.
நடிகர் சங்க விவகாரங்களிலும் முன்பைவிட இப்போது அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார்.

கமலின் புதிய படம் வரும் 29 -ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் படத்தின் தொடக்கவிழாவை நடிகர் சங்க கட்டிடம் இருந்த இடத்தில் நடத்துகிறார் கமல். டி.கே.ராஜீவ் குமார் இயக்கும் இப்படத்தில் கமலுடன் அவரது மகள் ஸ்ருதியும் இணைந்து நடிக்க உள்ளார்.

இதுகுறித்து கமல் கூறும்போது, எங்களுடைய ராஜ் கமல் பிலிம்ஸின் 41 ஆவது படத்தின் தொடக்கவிழாவை எங்கள் குடும்ப இடமான நடிகர் சங்க மைதானத்தில் நடத்த இருக்கிறோம் என்றார்.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...