‘காஷ்மோரா’ படம் குறித்து கார்த்தி நெகிழ்ச்சி!

????????????????????????????????????

கார்த்தியின் ‘சகுனி’ படத்திற்குப் பிறகு மீண்டும் கார்த்தி நடிக்க ‘காஷ்மோரா’ படத்தைத் தயாரிக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம். ஹீரோயின்களாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிக்கும் இப்படத்தை ‘ரௌத்ரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். ஃபேன்டஸி ஹாரர் த்ரில்லராக உருவாகிவரும் இப்படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இப்படத்திற்காக 12க்கும் மேற்பட்ட பிரம்மாண்டமான செட்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் கலை இயக்குனர் ராஜீவன். கார்த்தி வித்தியாசமான வேடங்களில் தோன்றும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதுகுறித்த தனது நெகிழ்ச்சியை ட்விட்டர் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் கார்த்தி.

‘காஷ்மோரா சாத்தியப்படாது என்றுதான் முதலில் நினைத்தோம். ஆனால், தற்போது அதை நிகழ்த்தி காட்டியிருக்கிறோம். படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்கிறோம். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குனர் கோகுலுக்கு நன்றிகள்! ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், கலை இயக்குனர் ராஜீவன் ஆகியோருடைய குழுவினரின் ஈடுபாடும், ஒத்துழைப்புமே இதை நடத்திக் காட்டியிருக்கிறது. மறக்க முடியாத அனுபவம்!’’

இவ்வாறு கார்த்தி ட்வீட் செய்திருக்கிறார்.

 
 
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...