குட்டி தலக்கு பெரும் வரவேற்பு கொடுத்த தல ரசிகர்கள்

imgshalini-ajith-aadivik
அஜித்-ஷாலினி தம்பதிக்கு ஏற்கெனவே அனோஸ்கா என்ற அழகான பெண் குழந்தை இருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்தது முதல் இக்குழந்தையை ரசிகர்கள் அனைவரும் ‘குட்டி தல’ என்று பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்தனர். ஆனால், பெற்றோர்களோ இக்குழந்தைக்கு ஆத்விக் என பெயர் சூட்டினர்.
பிறந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை ஆத்விக்கின் புகைப்படத்தை அஜித் எங்கேயும் வெளிவிடவில்லை. அவர் ஒரு புகைப்பட பிரியராக தனது மகனை ஏகப்பட்ட புகைப்படங்கள் எடுத்தும், எந்த புகைப்படமும் இதுவரை வெளியாகமலே இருந்தது.
கடைசியாக நேற்று முன் தினம் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்திருந்த அஜித்தை ரசிகர்கள் தங்களது செல்போன்களில் படம்பிடிக்க தொடங்கினர். அப்போது, குட்டி தல ஆத்விக்கையும் புகைப்படம் எடுத்து சமூக இணையதளங்களில் பரவ விட்டனர். இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், இன்று மேலும்  சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தவாறு பல்வேறு விதங்களில் மெருகேற்றி வருகின்றனர். ‘தல’யைப் போலவே ‘குட்டி தல’க்கும் ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...

Leave a Reply