சந்தோஷ் நாராயணனின் விருப்பத்தை விஜய் நிறைவேற்றுவாரா?

VIJAY-60-TRENDS aa

சமீபகாலமாக வெளியாகும் விஜய் படங்களில் எல்லாம் விஜய் எப்படியாவது ஒரு பாடல் பாடிவிடுவார். அவருடைய குரலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதால் இசையமைப்பாளர்களும் விஜய்யை எப்படியாவது ஒரு பாடலை பாடும்படி வற்புறுத்தி விஜய்யை பாடவைத்து விடுகின்றனர்.

இந்நிலையில், விஜய் தற்போது நடித்துவரும் விஜய் 60 படத்திலும் விஜய் ஒரு பாடல் பாடவேண்டும் என்று அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விருப்பம் தெரிவித்துள்ளாராம். சந்தோஷ் நாராயணனின் விருப்பத்தை விஜய் நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்காக இரண்டு பாடல்கள் பதிவு செய்யப்பட்டு, படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. இந்த பாடல்களில் விஜய் - கீர்த்தி சுரேஷின் ரொமான்ஸ் காட்சிகள் மிகவும் நன்றாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பரதன் இயக்கியுள்ளார். செப்டம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். பொங்கல் நாளில் இப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

[vivafbcomment]

Sharing This !
  • 13
  •  
  •  
  •  
  •  
    13
    Shares


You may also like...