‘சபாஷ் நாயுடு’வை நடித்து இயக்கி வரும் கமல்

19_kamal_jpg_1796854f
லைக்கா புரொடக்‌ஷன்ஸும், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இனடர்நேஷனலும் இணைந்து தயாரிக்கும் கமல்ஹாசனின் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பு சென்ற 7-ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்சில் துவங்கியது.அங்கு படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்த நிலையில் இயக்குனர் டி.கே.ராஜீவ் குமாருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. லாஸ் ஆஞ்சல்சில் உள்ள ஒரு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜீவ் குமாருக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் பரவலாக இருந்து வரும் ஒரு வித தொற்று நோய் ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த நோய் முற்றிலும் குணமாக ஓரிரு மாதங்கள் ஆகும் என்றும் அதுவரை சிகிச்சை தொடர வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து,
இப்போது ‘சபாஷ் பநாயுடு’வை இயக்கும் பொறுப்பை கமல்ஹாசன் கையில் எடுத்துள்ளார். கமல்ஹாசனுடன் ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ண்ன், சித்திக் முதலானோர் நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’வை நடித்து இயக்கி வரும் கமல்ஹாசனே இந்த தகவலை தனது படக்குழுவினர் மூலம் தெரிவித்துள்ளார்.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...