சல்மான்கானின் சுல்தான் சாதனையை எளிதில் வீழ்த்திய ரஜினியின் ‘கபாலி’

kabali-2

 

2016ம் ஆண்டில் இதுவரை வெளிவந்த இந்திய சினிமாவின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது ரஜினி நடிப்பில் வெளிவந்துள்ள 'கபாலி' திரைப்படம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த 22ம் தேதி காபலி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. 2016ம் ஆண்டில் இதுவரை எந்த படமும் நிகழ்த்திராத சாதனயை இப்படம் நிகழ்த்தியுள்ளது. கடந்த மாதம் இந்தி நடிகர் சல்மான்கானின் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் இந்தியாவில் முதல் நாள் செய்த வசூலே இதுவரை சாதனையாக இருந்து வந்தது.

இந்தியாவில், சுல்தான் திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ. 36.54 கோடி வசூல் செய்து சாதனையின் மகுடத்தில் இருந்து வந்தது. கபாலி இந்த சாதனையை எளிதில் வீழ்த்தி முதல் நாளில் மட்டும் ரூ. 48 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 21.5 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், கடந்த ஆண்டு வசூல் சாதனை செய்த திரைப்படங்களான பாகுபலி, அஜித்தின் வேதாளம், இந்த ஆண்டு வெளியான விஜயின் தெறி ஆகிய படங்களின் அணைத்து வித சாதனைகளையும் ரஜினியின் கபாலி உடைத்து புதிய சாதனை புரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...