‘சிங்கம்’ படத்தை எதிர்பார்த்து வரவேண்டாம். ‘பசங்க 2’ பிரஸ்மீட்டில் சூர்யா

imagesddd
இயக்குனர் பாண்டியராஜ் இயகத்தில் சூர்யா, அமலாபால் நடித்த 'பசங்க 2' திரைப்படம் நாளை மறுநாள் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நேற்று நடந்தது.
 
இதில் பேசிய இந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா, 'முதலில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்டெடுத்த அத்தனை முகம் தெரியாத நபர்களுக்கு தலைவணங்கி நன்றி கூறுவதாக  கூறினார்.
இந்த படத்திற்காக இயக்குனர் பாண்டியராஜனின் உழைப்பு அளவிட முடியாதது என்றும் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கும் மேல் இந்த படத்தின் திரைக்கதைக்காக அவர் உழைத்துள்ளார். என்றும் கூறினார்.
மேலும் இந்த படம் குழந்தைகளுக்காக மட்டுமே கடின உழைப்பால் உருவான படம். குழந்தைகள் வளரும் சூழ்நிலைகளை பற்றியும் அவர்களின் பிரச்சனைகள் பற்றியும் கலகலப்பாக பாண்டிராஜ் கதை கூறியுள்ளார். அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இந்த படத்தில் கண்டிப்பாக இருக்கும். அதே நேரத்தில் இந்த படத்தை 'சிங்கம்', 24 போன்ற படங்களை போல எதிர்பார்த்து வரவேண்டாம் என்றும் சூர்யா கூறினார்.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...