‘சிங்கம் 3’ படப்பிடிப்பு இன்று விசாகப்பட்டணத்தில்

சூர்யா-ஹரி இணைந்து 'சிங்கம்', சிங்கம் 2; ஆகிய இரண்டு தொடர் வெற்றி படங்கள் கொடுத்ததை அடுத்து இந்த படங்களின் அடுத்த பாகமான 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பு இன்று விசாகப்பட்டணத்தில் ஆரம்பமாகவுள்ளதாக வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் புதிய டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லு இன்று அதிகாலை 12 மணிக்கு வெளியாகியுள்ளது.
IndiaTvcd0915_Singam3

'சிங்கம் 3' படத்திற்கு புதிய டைட்டில் அறிவிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த படத்திற்கு 'S3' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலுடன் கூடிய இரண்டு போஸ்டர்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. சிங்கம் கர்ஜிப்பதுபோல் இருக்கும் இந்த போஸ்டர்கள் சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

சர்வதேச காவல்துறை அதிகாரியாக சூர்யா நடிக்கும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் சிபிஐ அதிகாரியாகவும், அனுஷ்கா சூர்யாவின் மனைவியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார்.

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...