கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டதால் சிம்பு தரப்பில் இருந்து சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நீதிபதி ராஜேந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.
சிம்புவுக்கு முன்ஜாமீன் கொடுக்க தமிழக அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
தேவைப்பட்டால் நீதிபதி அந்த பாடலை கேட்ட பின்னர் தனது தீர்ப்பை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த பாடலை தான் கேட்க விரும்பவில்லை என்று கூறிய நீதிபதி பொது வாழ்க்கையில் ஈடுபடுவோர் வார்த்தைகளை எச்சரிக்கையுடனும் கவனமாகவும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரைத்து பிற்பகலுக்கு இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.