சூர்யாவின் அடுத்த இயக்குனர் யார் ?? – ஞானவேல்ராஜா விளக்கம்

 Surya Singam 2 Stills
ஹரி இயக்கத்தில் சூர்யா தற்போது சிங்கம் படத்தின் மூன்றாவது பாகத்தில் நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசன் மற்றும் அனுஷ்கா நாயகிகளாக நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் 'கபாலி' இயக்குனர் பா.ரஞ்சித், சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்தார்.
 இந்நிலையில் 'கொம்பன், மருது, உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய முத்தையா சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 இதுகுறித்து ஞானவேல்ராஜா தற்போது விளக்கம் அளித்துள்ளார். 'இயக்குனர் முத்தையா எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்பது உண்மையே. தற்போது கதை விவாதம் நடைபெற்று வருகிறது. கதை தயாரானதும் இந்த படத்தின் ஹீரோவை இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் கலந்து முடிவு செய்வோம். சூர்யா உள்பட இன்னும் யாரையும் ஹீரோவாக கமிட் செய்யவில்லை' என்று கூறியுள்ளார்.
எனவே சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் முத்தையா அல்லது ரஞ்சித் இவர்களில் யார்? என்பதை சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...