சூர்யாவின் புதிய படம் கைவிடப்பட்டது இயக்குனர் விலகல்

நடிகர் அருண் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது இயக்குனர் ஹரி. இதற்கு மியூசிக் டைரக்டராக பணிபுரிய ஜிவி பிரகாஷ் அவர்கள் ஒப்பந்தமாகியுள்ளார். ஜிவி பிரகாஷ் இதற்கு முன்பு 2008 ஆண்டு ‘சேவல்’ படத்தில் பணிபுரிந்த. அதற்குப் பின்பு இயக்குனர் ஹரியுடன் இணையும் இரண்டாவது படம் இது.

இயக்குனர் ஹரி சூர்யாவை வைத்து இந்த படத்தை இயக்குவதாக இருந்தது. ‘அருவா’ என்று பெயர் வைத்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. மீண்டும் ஹரி தன்னுடைய மனைவியின் சகோதரரான அருண் விஜய்யை வைத்து மிகப்பெரிய வெற்றியை இந்த படத்தின் மூலம் கொடுத்து தான் ஒரு கமர்ஷியல் டைரக்டர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்.

அவர் இதற்கு முன்பு எடுத்த சாமி 2 படம் மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் டைரக்டர் ஹரி இயக்கும் மசாலா படமானது தற்போதுள்ள சூழ்நிலையில் மக்களிடையே எடுபடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதனால் சூர்யா அவர்கள் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார் என்று ஒரு தகவலும் கோலிவுட் வட்டாரத்தில் உலா வந்துகொண்டிருக்கிறது, எவ்வாறாயினும் இந்த படம் கண்டிப்பாக ஒரு வெற்றிப்படமாக அமைய இயக்குனர் ஹரி முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

You may also like...

Leave a Reply