தயாரிப்பாளர் சங்கங்களில் நயன்தாரா மீது புகார் – தெலுங்கு பட அதிபர்

2109 aa

நயன்தாரா, தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ஜீவா ஜோடியாக நடித்த திருநாள் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இருமுகன், காஸ்மோரா, டோரா ஆகிய படங்களும் கைவசம் உள்ளன.

தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக ‘பாபு பங்காராம்’ என்ற படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பில் நயன்தாராவுக்கும் வெங்கடேசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் நயன்தாரா, வெங்கடேஷ் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி உள்ளது. இந்த பாடல் காட்சியில் நடிக்கும்படி நயன்தாராவை அழைத்தனர். ஆனால் ஏற்கனவே அளித்த கால்ஷீட்டுகளை படக்குழுவினர் விரயம் செய்து விட்டதாக கூறி அதில் நடிக்க மறுத்து விட்டார். நயன்தாராவின் பிடிவாதத்தால் படம் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக படக்குழுவினர் குற்றம் சாட்டினர். வேறு வழியின்றி பாடல் காட்சியை படமாக்காமலேயே படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. அதில் கலந்து கொள்ளுமாறு நயன்தாராவை அழைத்தனர். ஆனால் அந்த விழாவிலும் அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டார். நயன்தாராவின் நடவடிக்கைகள் வெங்கடேசுக்கும் படக்குழுவினருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது தெலுங்கு நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்களில் புகார் அளிக்க ஆலோசித்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

 

[vivafbcomment]

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...