தல 57: ஏமாற்றிய சத்யஜோதி பிலிம்ஸ்…வருத்தத்தில் அஜீத்.

07-1460016270-06-1446787031-ajithwithdirrsiva-05-1462424286
சிறுத்தை சிவா-அஜீத் கூட்டணி 3 வது முறையாக தல 57 படத்தில் இணைந்துள்ளது. இதில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, ரித்திகா சிங் என 2 நடிகைளை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர காமெடிக்கு கருணாகரனை புக் செய்துள்ளதாகவும் கூறுகின்றனர். எனினும் இப்படம் குறித்த எந்தத் தகவல்களையும் படக்குழுவினர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இதனால் அஜீத் ரசிகர்கள் இப்படம் குறித்த தகவல்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் மாலை இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என இன்று காலை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இதனால் உற்சாகமடைந்த அஜீத் ரசிகர்கள் #thala57 என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி சமூக வலைதளங்களை தெறிக்க விட்டுக் காத்திருந்தனர்.
இந்நிலையில் ''இன்று இப்படம் குறித்த தகவல்களை வெளியிட முடியவில்லை. ரசிகர்களைக் காக்க வைத்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்'' என்று சத்யஜோதி நிறுவனம் தெரிவித்திருகிறது.

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...