தீபாவளியில் ரிலீஸ் ஆகும் விஸ்வரூபம் 2 – கமல்

default

விஸ்வரூபம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனரும் நடிகருமான கமல் ஹாசன் இதன் இரண்டாம் பாகத்தை உடனடியாக தொடங்கினார். இதன் 90% படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.

ஆனால் நிதி பிரச்சனை காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக இப்படம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்குள் கமல், உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம் என மூன்று படங்களில் நடித்துவிட்டார்.

இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்தை லைக்கா நிறுவனம் வெளியிட போவதாக சொல்லப்படுகிறது. என்ன நடந்தாலும் சரி, தீபாவளியில் இப்படத்தை திரைக்கு கொண்டுவர வேண்டும் என கமல் முடிவு செய்துள்ளாராம்.

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...