பாய்பிரண்ட் ஐ பெட்ரூம் அழைத்த இலியானா

ileana-45a
தமிழ், தெலுங்குக்கு டாட்டா காட்டிவிட்டு இந்தியில் நடிக்க சென்ற இலியானாவுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. பகீரத முயற்சிகளும் பலனளிக்கவில்லை. மீண்டும் தென்னிந்திய படங்களில் நடிக்க முடிவு செய்தார். மார்க்கெட்டில் இருந்தபோது அவரை அணுகியவர்களுக்கு அப்போது கால்ஷீட் தர யோசித்தார்.
தற்போது அவரே வலிய வந்து வாய்ப்புக்கு வலைவிரித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்படியே வாய்ப்பு தந்தாலும் குத்து பாடலுக்கு மட்டும் ஆட அழைக்கின்றனர்.
ஐதராபாத், மும்பையை காலி செய்துவிட்டு கோவாவில் தங்கி இருக்கும் இலியானா, பாய்பிரண்ட் ஆண்ட்ரு நீபோன் உடன் நெருக்கம் காட்டி வருகிறார். சமீபத்தில் இணைய தள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுக்கையில் ஆனந்த மயக்கத்தில் சிரித்தபடி இருக்கும் ஒரு புகைப்படத்தை இலியானா வெளியிட்டார்.
அந்த படத்தை எடுத்தது அவரது பாய்பிரண்ட்தான். இதுபற்றி இலியானா,’படுக்கைக்கு செல்லும்நேரம். என் நிஜதோற்றத்தை புகைப்படம் எடுப்பதற்கு யார் இருக்கிறார்கள். அது ஆண்ட்ரு நீபோன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...