‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு இந்த வரலாற்று இடத்தில் தான் – பிரகாஷ் ராஜ் – CineHacker

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு இந்த வரலாற்று இடத்தில் தான் – பிரகாஷ் ராஜ்

மணிரத்தினத்தின் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படம் மிகுந்த பிரமாண்ட செலவுடன் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ரவிவர்மன். இந்த படம் எழுத்தாளர் கல்கி அவர்களின் நாவலைத் தழுவி இப்படம் உருவாகிறது. இந்த படத்திற்கு திரைக்கதை அமைப்பதில் மணிரத்னத்துடன் இணைந்து குமாரவேல் உதவி இருக்கிறார்.

Ponniyin Selvan movie new poster

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் அடுத்தகட்டமாக மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு மிகப்பழமையான நகரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். அரண்மனை நகரம் என்று அழைக்கக்கூடிய அந்த கோயில்களும் அரண்மனைகளும் தான் முக்கிய காட்சியாக அமைந்திருக்கிறது. ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்றுப் படம் என்பதால் அங்கு ஷூட்டிங் நடத்த இயக்குனர் மணிரத்தினம் திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் கார்த்திக் மணிரத்தினம் மூவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பிரகாஷ்ராஜ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

You may also like...

Leave a Reply