போஸ்டர்களில் மிரட்டும் சூர்யா

CZbMePCUcAAGLcz
சூர்யா நடித்துள்ள ‘24’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தை விக்ரம் குமார் இயக்கியுள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.  இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கெனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.
மேலும், இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் சூர்யா அடர்ந்த தாடி, அழுக்கான முகம், கலைந்த தலைமுடி, மிரட்டும் கண்கள் என அனைவரையும் மிரட்டும் விதமான தோற்றத்தில் இருக்கிறார். இந்த போஸ்டரை பார்க்கும்போதே திகிலூட்டும் விதமாக இருக்கிறது.
இதை பார்க்கும்போது இந்த படத்திற்காக சூர்யா தனது அதிகபட்ச உழைப்பை கொடுத்திருக்கிறார் என்று தெரிகிறது. இப்படம் டைம் மெஷின் சம்பந்தப்பட்ட கதை. இந்த படத்தில் சூர்யா 3 வித்தியாசமான வேடங்களில் நடிக்கப்போவதாக கூறப்பட்டது. அதை இந்த போஸ்டர்கள் உறுதிபடுத்தியுள்ளன.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...