முத்தக் காட்சியில் நடிப்பது தவறா : இஷா தல்வார்

0

பத்ரி டைரக்‌ஷனில், சிவா கதாநாயகனாக நடித்த ‘தில்லுமுல்லு’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர், இஷா தல்வார். இவர், மும்பையை சேர்ந்தவர். ‘தட்டத்தின் மறயத்து” என்ற மலையாள படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதே படம், ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என்ற பெயரில் தமிழில் தயாராகி இருக்கிறது. இந்த படத்திலும் இஷா தல்வாரே கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

2 வருட இடைவெளிக்குப்பின், மீண்டும் தமிழ் படத்தில் நடித்தது பற்றி இஷா தல்வார், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு இஷா தல்வார் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: நிஜ வாழ்க்கையில் நீங்கள் காதலித்து இருக்கிறீர்களா?

பதில்:- எனக்கு இதுவரை யார் மீதும் காதல் வரவில்லை. என்னைப் பற்றி எந்த கிசுகிசுவும் வந்ததில்லை.

கேள்வி:- மும்பை கதாநாயகிகள் முத்தக் காட்சிகளில் தாராளமாக நடிக்கிறார்கள். நீங்கள் முத்தக் காட்சியில் நடிப்பீர்களா?

பதில்:- முத்தம், மனித வாழ்க்கையில் ஒரு பகுதிதான். எனவே முத்தக் காட்சியில் நடிப்பது தப்பு அல்ல என்று கருதுகிறேன். கதைக்கு தேவைப்பட்டால், முத்தக் காட்சியில் நான் நடிப்பேன்.

கேள்வி:- காதல், சோகம் இரண்டில் எந்த காட்சியில் நடிப்பது சுலபம்?

பதில்:- நடிப்பது, என் தொழில். அதில், எல்லாவிதமான காட்சிகளிலும் நடிப்பது என் கடமை. காதல், சோகம் இரண்டும் நடிப்புதான். எது சுலபம், எது சிரமம் என்று பிரித்துப் பார்க்கக் கூடாது. என்னைப் பொறுத்தவரை இரண்டும் ஒன்றுதான்.

கேள்வி:- ‘தில்லுமுல்லு’ படத்துக்குப்பின் தமிழ் பட உலகில் உங்களுக்கு ஒரு இடைவெளி விழுந்து விட்டதே?

பதில்:- மலையாளம், தெலுங்கு, இந்தி என மற்ற மொழி படங்களில் நடித்ததால்தான் இந்த இடைவெளி. இனிமேல், தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்துவேன்.”

இவ்வாறு இஷா தல்வார் கூறினார்.

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...