மொட்ட சிவா கெட்ட சிவா கு : டிமாண்டு!

Motta-Siva-Ketta-Siva-First-Look-Movie-Posters-2
காஞ்சனா 2’ மெகா ஹிட்டுக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் இரண்டு புதுப்படங்களில் நடிப்பதாக அறிவிப்பு பிரம்மாண்டமாக வெளியானது. அந்தப் படங்களுக்கு ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘நாகா’ என்று பெயரிடப்பட்டது
இப்போது சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் படம் ஒன்றில் லாரன்ஸ் நடித்து வருகிறார்.‘சிங்கம் புலி’ சாய்ரமணி இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்துக்கு ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ டைட்டில் பொருத்தமாக இருக்குமென்று சவுத்ரி கருதினார். எனவே, லாரன்ஸிடம் கேட்டபோது எந்த தயக்கமும் இல்லாமல் தன்னுடைய டைட்டிலை தானமாக கொடுத்துவிட்டார்.
அப்படியெனில், முன்பு அறிவிக்கப்பட்ட ‘மொட்ட சிவா கெட்ட சிவா?’ அதற்கு ‘பைரவா’ என்று புதுப்பெயர் சூட்டியிருக்கிறார் லாரன்ஸ். கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் ‘பைரவா’வை லாரன்ஸே எழுதி இயக்கி நடிக்கிறார்.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...