மோதுகிறதா விஜய்-சூர்யா படங்கள்?

29-1461933597-vijay-surya-10-60
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் வரும் ஜனவரிக்குள் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலைப்புலி எஸ்.தாணு அனேகமாக வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் இந்த படத்தை தாணு ரிலீஸ் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சூர்யா நடித்து முடித்துள்ள '24' திரைப்படமும் இதே தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்புரடொக்ஷன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஜய் நடித்த 'அழகிய தமிழ்மகன்' மற்றும் சூர்யா நடித்த 'வேல்', விஜய் நடித்த வேலாயுதம் மற்றும் சூர்யா நடித்த 'ஏழாம் அறிவு' ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் மீண்டும் ஒரு முறை 'தெறி' மற்றும் '24' படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...