ரஜினியுடன் மீண்டும் மோதும் தல அஜித் படம்? வெற்றி வாய்ப்பு யாருக்கு?
தமிழ் திரையுலகில் உச்ச நச்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித்குமார் . இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உலகம் முழுவதிலும் இருக்கிறது. சில சமயங்களில் (twitter , facebook ) போன்ற சோசியல் மீடியாவில் சண்டைகளும் வருவதுண்டு.

சென்ற வருடம் பொங்கலுக்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் பேட்டை படமும் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்த விசுவாசம் படமும் வெளியானது.
பேட்ட படத்தின் box Office வசூலை விட விசுவாசம் படத்தின் box Office வசூல் மிக அதிகம். காரணம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக விசுவாசம் அமைந்தது.
தற்போது ரஜினிகாந்த் அவர்கள் அண்ணாத்த படத்திலும் தல அஜித் வலிமை படத்திலும் நடித்து வருகின்றனர்.
கொரோனா பாதிப்பால் சினிமா ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 2020 முதல் ஷூட்டிங் தொடங்கும் என இரு படத்தின் தயாரிப்பாளரும் கூறுகின்றனர்.
இரு படங்களும் வரும் 2021 கோடை விடுமுறையில் வெளியாகும் என தெரிகிறது. இந்த முறை வெற்றி பெற போவது ரஜினிகாந்த் படமா? இல்லை தல அஜித் படமா? என பார்ப்போம்.