ரஜினியை தொடர்ந்து சூர்யாவை இயக்கும் பா.ரஞ்சித்

Suriya-with-Pa-Ranjith
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘24’ படம் 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து தற்போது ஹரி இயக்கத்தில் ‘எஸ்3’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார் சூர்யா. ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகிவரும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் சூர்யா நடிப்பது உறுதியாகியுள்ளது. நேற்று ஐதரபாத்தில் நடந்த ‘கபாலி’ படத்தின் தெலுங்கு ஆடியோ வெளியீட்டில் கலந்துகொண்ட பா.ரஞ்சித், இந்த தகவலை கூறியுள்ளார்.
‘எஸ்.3’ படத்தை தொடர்ந்து சூர்யா, த்ரிவிக்ரம் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என ஒரேநேரத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கப்போவதாக வெளிவந்துள்ள செய்தி சூர்யா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த படம் குறித்த மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...