ரஜினி பேசும் வசனங்களை 10 நாட்களுக்கு கேட்க முடியாது. எஸ்.எஸ்.ராஜமெளலி

3
உலகமே திரும்பி பார்க்கும் வகையில் 'பாகுபலி' என்ற பிரமாண்டமான திரைப்படத்தை எடுத்து இந்திய திரையுலகின் பெருமையை உலக அளவில் உயர்த்திய இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி என்றால் அதில் எவ்வித சந்தேகமும் யாருக்கும் இருக்காது. இந்த படத்திற்கு பின்னர் ராஜமெளலியின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்களே வெளிப்படையாக விருப்பம் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராஜமெளலியின் இயக்கத்தில் நடித்தால் அந்த படம் எப்படி இருக்கும்? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து அவரே சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
நான் மட்டும் ரஜினியின் படத்தை இயக்கினால் அந்த படம் திரையரங்கில் வெளியாகும்போது முதல் பத்து நாட்களுக்கு அந்த படத்தின் ரஜினி பேசும் ஒரு வசனத்தை கூட யாரும் காதால் கேட்கமுடியாது. அந்த அளவுக்கு ரஜினி ரசிகர்களின் விசில் சத்தம் விண்ணை பிளக்க வைக்கும் வகையில் இருக்கும்' என்று கூறியுள்ளார்.
எஸ்.எஸ்.ராஜமெளலியின் இந்த கூற்று உண்மையாகும் காலம் எப்போது வரும் என்று ஒவ்வொரு ரஜினி ரசிகரும் எதிர்பார்த்து காத்திருக்க கொண்டிருப்பார்கள் என்பது மட்டும் உண்மை.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...