ரஜினி போடப் போகும் 30 செகன்ட் “குத்து”!

download
ஒவ்வொரு நாளும் கபாலி குறித்து வெளியாகும் புதிய தகவல்கள் ரசிகர்களின் ஜூரத்தை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. யுட்யூபில் இப்போதைய ஹாட் டாபிக்கே கபாலிதான். ஒரு பக்கம் கபாலி டீசர் 23 மில்லியன் பார்வைகளைத் தாண்டி உலக சாதனை படைக்க, இன்னொரு பக்கம் கபாலி பாடல் வரிகள் கொண்ட வீடியோக்கள் பத்து மில்லியனுக்கும் மேல் தாண்டி பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கின்றன.

இப்போது கபாலியில் ரஜினியின் டான்ஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் இடம் பெறும் ஒரு பாடலில் 30 செகன்டுகளுக்கு ஒரு குத்து டான்ஸ் போட்டுள்ளாராம் ரஜினிகாந்த். ரஜினி டான்ஸ் ஆடுவது போன்ற ஒரு ஸ்டில்லும் இன்று வெளியாகியுள்ளது.

நெருப்புடா :
சமீபத்தில் விடப்பட்ட புதிய 35 நொடி நெருப்புடா பாடல் டீசரோ, 5 மில்லியன் பார்வைகளைக் கடந்து ஆச்சர்யப்படுத்தி வருகிறது. இந்த வீடியோக்கள் ஒவ்வொன்றின் மூலமும் பல கோடி ரூபாய் வருமானம் தயாரிப்பாளருக்கும், இசை வெளியீட்டு உரிமை பெற்ற திங்க் மியூசிக் நிறுவனத்துக்கும் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...