ராஜமவுலி ன் ‘பாகுபலி 2’ : காட்டு வாசிகள் எதிர்ப்பு

1
மம்மூட்டி, சரத்குமார் நடித்த ‘பழஸிராஜா’ படத்தை பார்த்த இயக்குனர் ராஜமவுலிக்கு அப்படத்தில் இடம்பெற்ற மரங்கள் அடர்ந்த காட்டுபகுதி லொகேஷன் மிகவும் பிடித்தது. கேரளாவில் கண்ணூர் பகுதியில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருந்தது. அதே லொகேஷனில் ‘பாகுபலி 2’ம் பாக படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டார். கோயில், கோட்டை உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டன.
ஆந்திராவில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துக்கொண்டு படக்குழுவினருடன் கண்ணூர் புறப்பட்டு சென்றார் ராஜமவுலி. காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த முறைப்படி அரசிடம் அனுமதி பெறப்பட்டிருந்தது.
படப்பிடிப்பு தொடங்கிய நேரத்தில் அப்பகுதியில் வாழும் காட்டு வாசிகள் இங்கு ஷூட்டிங் நடத்தக்கூடாது என தடுத்தனர். முறைப்படி அனுமதி பெறப்பட்டிருக்கிறது என பட குழுவினர் எடுத்துச் சொல்லியும் எதிர்ப்பு தொடர்ந்தது. படப்பிடிப்பு நடத்தினால் இயற்கை சூழல் பாதிக்கப்படும் என்று கூறி பட குழுவினரை வெளியேற்ற முயன்றனர்.
காட்டுவாசிகளுடன் பட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். படப்பிடிப்பில் பிரபாஸ். அனுஷ்கா, தமன்னா கலந்துகொள்ள காத்திருக்கின்றனர்.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...