லிங்குசாமியுடன் மீண்டும் கைகோர்க்கிறாரா கமல்?

a511eb9e-7222-4739-bff8-907ba49e0ef4_S_secvpf.gif
கமல் நடிப்பில் லிங்குசாமி தயாரித்த ‘உத்தமவில்லன்’ படம் பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த படத்தின் மூலம் நிறைய இழப்புகளை சந்தித்த ‘லிங்குசாமி’ தற்போது ‘ரஜினிமுருகன்’ படத்தின் மூலம் சற்று நிமிர்ந்து நிற்கிறார். ‘ரஜினிமுருகன்’ படத்தின் வசூல் லிங்குசாமிக்கு கணிசமான லாபத்தை ஈட்டித் தந்துள்ளதாக கூறப்படுகிறது.
‘உத்தமவில்லன்’ தோல்விக்கு பிறகு, அந்த நஷ்டத்தை ஈடுசெய்து கொடுக்க கமல் மறுபடியும் லிங்குசாமியின் மற்றொரு படத்தில் நடித்துக்கொடுக்க கமல் சம்மதம் தெரிவித்ததாக அப்போது செய்திகள் வெளிவந்தது. இந்த செய்திக்கு இரண்டு தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை.
இந்நிலையில், லிங்குசாமியுடன் கமல் கைகோர்க்கப்போவதாக மீண்டும் ஒரு செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அதாவது, கமலுக்காக லிங்குசாமி இரவு-பகலாக கண்விழித்து ஒரு கதையை தயார் செய்து வைத்துள்ளாராம். அந்த கதையில் கமல் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தை லிங்குசாமியே இயக்கப்போவதாகவும், இதில் கமல் பல்வேறு கெட்டப்புகளில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை இயக்குவதோடு லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளாராம். இவருடன் பென் மூவிஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கப்போவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...