லேட்டஸ்ட் அப்டேட் :தல 57 ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உருவாகும்

Ajith-To-Be-Seen-In-A-Younger-Look-In-Thala-57-Latest-Kollywood-News-1000x22222222222222222222222509

‘வீரம்’, ‘வேதாளம்’ படங்களைத் தொடர்ந்து அஜித்-சிறுத்தை சிவா 3-வது முறையாக ‘தல 57’ படத்திற்காக இணைந்துள்ளனர். இந்திய நாட்டின் ராணுவ ரகசியங்களை வெளிநாடுகளில் கசியவிடும் துரோகிளை தேடிக் கண்டுபிடித்து, அவர்களைப் பழிவாங்கும் உளவாளி வேடத்தில் அஜித் நடிக்கவிருக்கிறாராம்.

அஜித்தின் உடல்நிலை காரணமாக தள்ளிப்போன ‘தல 57’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 2-ம் தேதி பல்கேரியாவில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு இப்படத்தின் முக்கிய காட்சிகளை சுமார் 40 நாட்கள் படம்பிடிக்கவுள்ளனராம். ஐரோப்பாவின் மிகப்பெரிய ஸ்டுடியோக்களில் ஒன்றான 'நிபோயனா'வில் இப்படப்பிடிப்பை நடத்திட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

இந்த ஸ்டுடியோவில் ஹாலிவுட்டில் புகழ்பெற்ற படங்களான ‘300 ரைஸ் ஆப் ஆன் எம்பையர்’, ‘தி எக்ஸ்பெண்டபிள்ஸ்(2&3)’, ‘லண்டன் ஹேஸ் பாலன்’ போன்ற படங்களின் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். தற்போது ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பு இங்கே நடைபெறும் பட்சத்தில் ‘நிபோயனா’வில் படம்பிடிக்கப்படும் முதல் தமிழ் மற்றும் தென்னிந்தியத் திரைப்படம் என்ற பெருமை அஜித் படத்திற்கு கிடைக்கும்.

ஷாருக்கானின் ‘தில்வாலே’ திரைப்படம் இந்த ஸ்டுடியோவில் படம்பிடிக்கப்பட்ட முதல் இந்தியப் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

[vivafbcomment]

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...