வர்ஷா பொல்லம்மாவின் அஜித் கனவு!

NTLRG_20160809095149724224 aa

மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்த நடிகைகளில் நஸ்ரியாவும் முக்கியமானவர். நேரம் படத்தில் வந்த அவர், அதன்பிறகு ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா போன்ற படங்களில் நடித்தார். அந்த சமயத்தில் ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியிருந்த நஸ்ரியா, அதை யடுத்து மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு டாடா காட்டி விட்டார்.

அவரைத் தொடர்ந்து நஸ்ரியா சாயலில் பெங்களூரில் இருந்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இன்னொரு நடிகைதான் வர்ஷா பொல்லம்மா. சதுரன், வெற்றிவேல் ஆகிய படங்களில் நடித்தவர், தற்போது இவன் யாரென்று தெரிகிறதா, யானும் தீயவன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் யானும் தீயவன் படத்தில் சிங்கிள் நாயகியாக நடித்துள்ள வர்ஷாவுக்கு பர்மாமென்ஸ் ஸ்கோப் அதிகம் கிடைத்துள்ளதாம். அதனால் இந்த படம் தனக்கு தமிழில் ஒரு திருப்புமுனை படமாக அமையும் என்று எதிர்ப்பார்க்கிறாராம்.

மேலும், தமிழ் சினிமாவில் அஜித்துடன் ஒரு படத்திலேனும் டூயட் பாடி விட வேண்டும் என்கிற பெருங்கனவும் வர்ஷா பொல்லம்மாவுக்கு உள்ளதாம்.

 

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...