விஜய் நடிக்கும் 60வது படத்தில் கீர்த்தி சுரேஷ்…

CX2aFRNUAAAb2vH.jpg large
 
சில வருடங்களுக்கு முன் கோலிவுட்டில் ஹீரோயின்களுக்கு பஞ்சம் நிலவியது. திரிஷா, நயன்தாரா, காஜல், அனுஷ்கா, தமன்னா என நான்கைந்து ஹீரோயின்களே ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு வந்தனர். ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ், ஸ்ரீதிவ்யா, எமி ஜாக்ஸன், பார்வதி என வரிசையாக பல ஹீரோயின்கள் போட்டி களத்தில் குதித்ததால் தற்போது ஹீரோயின் பஞ்சம் தீர்ந்து எந்த ஹீரோயினை தேர்வு செய்வது என்ற நிலை உருவாகி இருக்கிறது. தவிர படத்துக்கு படம் புதுமுக ஹீரோயின்கள் அறிமுகமான வண்ணம் உள்ளனர். இது இயக்குனர்களுக்கு சாதகமான காலமாக உள்ளது.
விஜய் நடிக்கும் 60வது படத்தை பரதன் இயக்க உள்ளதாக தகவல் வெளியான கையோடு அதில் மியா ஜார்ஜ் நடிக்கவுள்ளதாகவும் கொசுறு செய்தி வந்தது. மியாவோ விஜய்யுடன் நடிக்க தன்னை யாரும் கேட்கவில்லை என்று சஸ்பென்ஸை உடைத்தார்.
தற்போது கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கப்போவதாக இணைய தளத்தில் வேகமாக தகவல் பரவிவருகிறது. அவரிடம் கேட்டால்‘விஜய்யுடன் நடிக்க ஆசையாக உள்ளது. அப்படியொரு வாய்ப்பு வந்தால் விடமாட்டேன்’ என வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இந்த வாய்ப்பு கைகூடுமா? ஏமாற்றமாக அமையுமா?’ என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...