விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்?

ed0451c6-9464-47c6-9633-bdc388a1f3ab_S_secvpf.gif
விஜய் சேதுபதி நடிப்பில் ‘சேதுபதி’, ‘காதலும் கடந்து போகும்’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. மேலும் ‘மெல்லிசை’, ‘இறைவி’, ‘தர்மதுரை’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. அத்துடன் காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன் இயக்கத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் அடுத்ததாக அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வா டீல்’ படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த புதிய படத்திற்கு ‘ரெக்கை’ என பெயர் வைத்திருக்கின்றனர். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தை கணேஷ் தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ஆரஞ்சு மிட்டாய் படத்தை தயாரித்தவர்.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...