சூர்யா நடிப்பில் நாளை 24 படம் பிரமாண்டமாக வரவிருக்கின்றது. இந்நிலையில் இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ ஒன்றை இன்று மதியமே வட இந்தியா சினிமா விமர்சகர் ஒருவர் பார்த்து விட்டார்.
அவர் பார்த்து கூறிய தகவல்கள் இதோ ‘இப்படம் பிரமாண்டமாக உள்ளது, அவை ஒவ்வொரு காட்சி அமைப்பிலும் தெரிகின்றது.
சூர்யா மற்றும் சமந்தாவின் காதல் காட்சிகள் மிகவும் அழகாக இருக்கின்றது. சூர்யா இப்படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதிலும் நெகட்டிவ் கதாபாத்திரம் மிகவும் ஈர்க்கின்றது, விருதுகளை அந்த கதாபாத்திரம் தட்டிச்செல்லும்.
படத்தின் இடைவேளை மிகவும் எமோஷ்னலாக உள்ளது, அதை விட பல திருப்பங்கள் உள்ளது, கண்டிப்பாக இந்த படம் உங்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும்’ என்று கூறியுள்ளார். பிறகு என்ன சூர்யா ரசிகர்கள் ரெடியாக இருங்கள்.