சல்மான்கானின் ‘சுல்தான்’ முதல் நாள் வசூல் இதுதானா ?

11
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் மற்றும் அனுஷ்கா சர்மா நடிப்பில் நேற்று வெளியான 'சுல்தான்' திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.40 கோடியை தாண்டிவிட்டதாகவும், சல்மான்கானின் முந்தைய படமான "Prem Ratan Dhan Payo" படத்தின் முதல் நாள் வசூலான ரூ.39 கோடி சாதனையை இந்த படம் முறியடித்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 'சுல்தான்' திரைப்படம் இந்தியாவில் 4100 திரையரங்கிலும், வெளிநாடுகளில் 1100 திரையரங்குகளிலும், மொத்தத்தில் 5200 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளிலும் 90 முதல் 100% வரை நேற்றைய முதல் நாளில் திரையரங்குகள் நிரம்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 நேற்று விடுமுறை தினமாக இல்லாத நிலையிலும் இந்த படம் வசூலில் சாதனை செய்துள்ளது என்பதும் இன்றைய விடுமுறை நாள் மற்றும் வார இறுதியின் வசூலையும் சேர்த்தால் இந்த படம் மிக விரைவில் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 சல்மான்கான், அனுஷ்கா சர்மா முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தை அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசை இந்த படத்தின் பெரிய பலம் என்று கூறப்படுகிறது.
Sharing This !
  •  
  •  
  •  
  • 2
  •  
    2
    Shares


You may also like...