மலையாளத்தில் முன்னணி நடிகருடன் நயன்தாராவின் அடுத்த படம் – CineHacker

மலையாளத்தில் முன்னணி நடிகருடன் நயன்தாராவின் அடுத்த படம்

மலையாளத்தில் பிரபல இயக்குனரான அல்ஃபோன்ஸ் புத்திரன் அவர்களின் அடுத்த படம் நயன்தாரா மற்றும் பிரித்திவிராஜ் நடிப்பில் உருவாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரித்திவிராஜ் அவர்கள் தயாரிக்கவுள்ளார்.

Prithviraj and nayanthara

இன்னும் நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. நயன்தாரா ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்தே’ விஜய் சேதுபதியுடன் ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டுள்ளார்.

அல்போன்ஸ் புத்திரன் அவர்களின் திரைப்படம் திரையில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும், திரைக்கதையில் புதிய பிரம்மாண்டத்தை ஏற்படுத்தியுள்ளார். 2013இல் அவர் எடுத்த ‘நேரம்’ படம் மிகுந்த பாராட்டைப் பெற்றது. அதற்கு அடுத்து 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமாவை மட்டுமல்லாது இந்திய சினிமா வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக அமைந்தது. அவருடன் தற்போது நயன்தாரா மற்றும் பிரித்திவிராஜ் இணை இனிய அதிக வாய்ப்புள்ளது என்று திரை வட்டாரத்தில் தகவல் கசிந்துள்ளது.

You may also like...

Leave a Reply