விஜய்சேதுபதி நடிக்கும் ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – CineHacker

விஜய்சேதுபதி நடிக்கும் ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்துவாக்குல இரண்டு காதல்‘ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைந்துவிடும். இந்த படத்தை விக்னேஷ் சிவன் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் மற்றும் லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா, நயன்தாரா நடிக்கின்றனர்.

ஏற்கனவே நானும் ரவுடிதான் படத்தின் மூலம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாம் முறையாக விஜய்சேதுபதி நயன்தாரா கூட்டணி அமைந்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ஒளிப்பதிவு விஜய் கார்த்திக் கண்ணன்.

இந்தப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூர் ஹைதராபாத் பாண்டிச்சேரி போன்ற இடங்களில் நடந்து வருகிறது. இந்த படத்தை இந்த வருட இறுதியில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

You may also like...

Leave a Reply